உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பா.ம.க., செயற்குழு கூட்டம்

 பா.ம.க., செயற்குழு கூட்டம்

வானுார்: விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். தலைவர் சேது வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், கணேசன், மகாலிங்கம், ராஜ்குமார், ஹரிதாஸ், மணிகண்டன், அருண், முருகன், சத்தியா, சந்திரசேகர், பிரசாந்த், கோவிந்தன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவழகன் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் சம்பத், தர்மன், வீரப்பன், ஆறுமுகம், சிவகங்கை உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நிலை கட்டமைப்பு அமைப்பது. பூத் கமிட்டி அமைப்பது. வரும் டிசம்பர் 17ம் தேதி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி தலைமையில் நடக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தில் வானுார் மற்றும் திண்டிவனம் தொகுதிகளில் இருந்து திரளான நிர்வாகிகள் பங்கேற் பது. கொஞ்சிமங்கலத்தில் இருந்து எடச்சேரி வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் சுடுகாடு பாதையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்