உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

செஞ்சி : சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்தனர்.செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் மேல்மலையனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 8 மாத கர்ப்பத்துடன், மருத்துவ பரிசோதனை மற்றும் கர்ப்ப கால தடுப்பூசி போட சென்றார். சிறுமிக்கு 15 வயதே ஆனதால் சுகாதாரத் துறையினர், சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், செவலைபுரையை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சின்னராசு, 19; சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தததால், கர்பமானது தெரிய வந்தது.மேல்மலையனுார் மகளிர் ஊர் நல அலுவலர் ஜூவாலாமாலினி கொடுத்த புகாரின் பேரில், சின்னராசு மீது செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ