மேலும் செய்திகள்
முதியவர் மாயம் போலீஸ் விசாரணை
24-Mar-2025
தந்தை மாயம் மகள் புகார்
26-Mar-2025
கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.கண்டமங்கலம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுப்பது குறித்து வணிகர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் நல்லுறவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமை தாங்கி, வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.சந்தேகப்படும் நபர்கள் தடைகளுக்கு வரும்போது உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
24-Mar-2025
26-Mar-2025