உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்வி நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீசார் அறிவுறுத்தல்

கல்வி நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீசார் அறிவுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களை சுத்தம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திட வேண்டும் என போலீசார் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி பொறுப்பாளர்களும் தங்களது பள்ளி வளாகங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள், குடிநீர் தொட்டிகள், கிணறுகள், கழிவறைகள், தரைதள நீர்தேக்க தொட்டிகள், சுற்றுச்சுவர், அடுக்குமாடி கட்டடங்களின் வராண்டாவில் உள்ள கைப்பிடி சுவர்கள் ஆகியவற்றின் உறுதி தன்மையை சுய ஆய்வு செய்ய வேண்டும். தங்களது கல்வி நிலையங்களின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைத்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திட வேண்டும் என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை