மேலும் செய்திகள்
லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
23-Oct-2025
விக்கிரவாண்டி: நர்சிடம் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி நித்யா, 25; இவர் விழுப்புரம், தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பணி முடிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். கப்பியாம்புலியூர் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் அவர் வரும் பொழுது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், நித்யாவின் கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Oct-2025