உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உடலில் காயங்களுடன் கடலில் வாலிபர் சடலம் கொலையா என போலீஸ் விசாரணை

உடலில் காயங்களுடன் கடலில் வாலிபர் சடலம் கொலையா என போலீஸ் விசாரணை

வானுார் : கோட்டக்குப்பம் அருகே காயத்துடன், கரை ஒதுங்கிய வாலிபர் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம்,புத்துப்பட்டு புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 28 மதிக்கத்தக்க வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.புதுச்சேரியில் இயங்கும் பிரபல பீட்சா கடையின் பெயர் பொறிக்கப்பட்ட டீ சர்ட் அணிந்திருந்தார். கழுத்து, வயிற்று பகுதியில் காயங்கள் இருந்தது அவரது உடலை கைப்பற்றி போலீசார் காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் இறந்தவர் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவா, 28; என்பதும் புதுச்சேரியில் உள்ள பிரபல பீட்சா கடையில் வேலை பார்த்ததும், கடந்த 6ம் தேதி பணம் வாங்கச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கோட்டக்குப்பம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மரைக்காயர் தோப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரிந்தது.உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை