மகனுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி: மகனுடன் மயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பெரியதச்சூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன், 36; கூலித்தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி, 35; மகன் மித்ரன், 8; கடந்த 26 ஆம் தேதி, சென்னை வேப்பம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு காந்திமதி மற்றும் மகன் மித்ரன் ஆகிய இருவரும் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெரியதச்சூர் போலீசில் வீரப்பன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.