உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின் றனர். புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு பாளையம், கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் அமிர்தராஜ், 65; இவர், தனது குடும்பத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன், விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மகாராஜபுரம் பஸ் நிறுத்ததிற்கு வந்தபோது அமிர்தராஜை காணவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !