மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை
25-Oct-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 24ம் தேதி காலை 6:00 மணியளவில் அதே பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்றார். பின், வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் மணிவாசகன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Oct-2025