மேலும் செய்திகள்
கால்நடை முகாம்
12-Jun-2025
கால்நடை சிகிச்சை முகாம்
12-Jun-2025
செஞ்சி; ஜெயங்கொண்டான் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கால்நடை துறை இணை இயக்குநர் பிரசன்னா, உதவி இயக்குநர் தண்டபாணி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் லட்சுமி சுப்ரமணி வரவேற்றார்.முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, சிறந்த கிடாரிகளுக்கு பரிசு மற்றும் தாது உப்பு, பசுந்தாள், புல்கரணை ஆகியவற்றை வழங்கினார்.கால் நடை மருத்துவர்கள் மணிமாறன், சகுந்தலா, நிர்மலன், சந்தோஷ் மற்றும் குழுவினர் கால்நடைகளுக்கு அடைப்பான் நோய் தடுப்பூசி, குடல் புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, இளைஞரணி பழனி, தொண்டரணி பாஷா, ராமதாஸ் பங்கேற்றனர்.முகாமில், முதன் முறையாக நேற்று 5 வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. நாய்களின் உமிழ்நீரில் இருந்தும் ரேபிஸ் பரவக்கூடியது. எனவே, இது போன்ற முகாம்களில் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிபோடுவது நாய் வளர்ப்பவர்களுக்கு பாதுகாப்பானது.
12-Jun-2025
12-Jun-2025