மேலும் செய்திகள்
அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
07-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அரசியல் கட்சியினர், அமைப்பினர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க.,: விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, தி.மு.க., சார்பில் அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.அ.தி.மு.க.,: நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் பங்கேற்றனர்.தே.மு.தி.க.,: மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில், அக்கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பா.ஜ.,: மாவட்ட தலைவர் கலிவரதன், பட்டியல் அணி தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையிலும், வி.சி., கட்சியினர் மாவட்ட செயலாளர் பெரியார் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சியினர் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையிலும், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சேகர், செயலர் கருணாமூர்த்தி தலைமையிலும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.
07-Dec-2024