ஓட்டுச்சாவடி அலுவலர் பயிற்சி முகாம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் செல்வமூர்த்தி, தனி தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தாசில்தார் பாரதிதாசன் வரவேற்றார். தொகுதியில் அன்னியூர், கஞ்சனுார் குறுவட்டத்தில் நடக்க உள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து ஆலோசனைகளை வழங்கி பயிற்சி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் உதவியாளர் உஷா, வருவாய் ஆய்வாளர்கள் ஆதிலட்சுமி விஜயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.