உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சாலையில் பள்ளங்கள் : வாகன ஓட்டிகள் அவதி

 சாலையில் பள்ளங்கள் : வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோடு வழியாக சாலாமேடு, திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. முக்தி எரிவாயு மின் தகன மேடை பகுதியில், சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். மேலும், இப்பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ