பவ்டா நிதி நிறுவன பொதுக்குழு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் பவ்டா தலைமை அலுவலகத்தில், 30 வது நிதி நிறுவன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலாண் இயக்குனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 'பவ்டா நிதி நிறுவனம் சார்பில் இரு துணை நிறுவனங்கள் துவங்கப்படும். இந்த நிறுவனங்கள் காப்பீடு சம்பந்தமான காரியங்களை செய்யக்கூடும். பாதுகாப்போடு கூடிய தனிநபர் கடனாக, ரூ.5 லட்சம் முதல் 20 லட்சம் வரை தரப்படும். ஈவுத்தொகை 10 சதவீதம் பங்குதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அனைத்து பணியாளர்களும் முழுமையான ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும்,' என்றார். இதில் துணை மேலாண்மை இயக்குனர் அல்பினா ஜோஸ் முன்னிலை வகித்தார். இதில், சுயாதீன இயக்குனர் அசீர் ராஜா செல்வம், இயக்குனர்கள் செல்வம், ராலன் ஜார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முதன்மை நிதி அலுவலர் பாலாஜி ரங்கராஜன், இந்தாண்டிற்கான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ததை பங்குதாரர்கள் ஏற்று கொண்டனர். இந்த கூட்டத்தில், தலைமை கண்காணிப்பு அலுவலர் மாடசாமி, முதுநிலை பொது மேலாளர்கள் சேனாதிபதி, சாந்தாராம், பொது மேலாளர்கள் புகழேந்தி, பன்னீர்செல்வம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.