உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

கண்டாச்சிபுரம்: சித்தாத்துார் வயலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.முன்னதாக அறிவுடைநாயகி சமேத வயலீஸ்வரருக்கு நேற்று முன்தினம் காலை அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பிரதோஷ கால சுவாமிகளுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரத்தில் சுவாமிகள் ஊர்வலம் நடந்தது.

மயிலம்

கொல்லியங்குணம் நீலகண்டேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

விழுப்புரம்

பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை