உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மகாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வானுார் இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.அதனையொட்டி நேற்று மாலை மூலவர் மகாகாளேஸ்வரர், அம்பாள் மது சுந்தரநாயகி என்கிற குயில் மொழியம்மை மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமி மாகா காளேஸ்வரர், மது சுந்தரநாயகியுடன் சமேதராக நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !