உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய போட்டிக்கு தேர்வான தடகள வீரருக்கு பாராட்டு..

தேசிய போட்டிக்கு தேர்வான தடகள வீரருக்கு பாராட்டு..

விழுப்புரம்: தேசிய அளவிலான மாரத்தான் போட்டிக்கு தேர்வான விழுப்புரம் தடகள வீரர் பாராட்டப்பட்டார்.விழுப்புரத்தில் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் கடந்த 5ம் தேதி, மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடந்தது. பல்வேறு பிரிவுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.இதில், 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், விழுப்புரம் ராகவன்பேட்டை ட்ரீம் ஸ்போர்ட்ஸ் இலவச பயிற்சி மையத்தில் பயின்று வந்த பிரேம்குமார் என்ற மாணவன் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்தார். இவர், உத்திர பிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்குபெற தேர்வு பெற்றார். விழுப்புரம் மாணவர் பிரேம்குமாரை, மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலர் மணிவண்ணன், ஊர்காவல் படை மண்டல தலைவர் நத்தர்ஷா, உடற்கல்வி இயக்குநர் சூரியகுமார் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி