கன்னிகாபரமேஸ்வரி பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் வழங்கல்
திண்டிவனம்; திண்டிவனம் ேஹாஸ்ட் லயன் சங்கத்தின் சார்பில் கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தினமலர் 'பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், தினமலர் 'பட்டம்' இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் ேஹாஸ்ட் லயன் சங்கத்தின் சார்பில் , கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தினமலர் 'பட்டம்' நாளிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சுதர்சனன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் சுகுமார், செயலாளர்கள் புஷ்பராஜ், பாலமுருகன், பொருளாளர் பாலாஜி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினர்.இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், அன்னைசஞ்சீவி, பிரபாகரன், வழக்கறிஞர் கார்த்திக்கருணாகரன், பள்ளியின் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, சிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.