உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் பஸ் மோதல் : பெண் பலி

தனியார் பஸ் மோதல் : பெண் பலி

திண்டிவனம்; திண்டிவனம் அருகே, தனியார் பஸ் மோதி, மொபட்டில் சென்ற பெண் பலியானார். எறையானுாரை சேர்ந்தவர் விநாயகம், 60; இவரது மனைவி முனியம்மாள், 56; இருவரும் நேற்று மொபட்டில் திண்டிவனம் நோக்கி சென்றனர். மேம்பாலம் மீது சென்ற போது, அங்கு இடப்புறமாக வந்த தனியார் பஸ், விநாயகம் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள், உயிரிழந்தார். விநாயகம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை