உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் பகுதியிலிருந்து ரெட்டணை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார் 40 பேருடன் தனியார் பஸ்சில் நேற்று வந்தனர். பிற்பகல் 2:45 மணியளவில் ரெட்டணை அடுத்த வெங்கந்துார் அருகே வந்தபோது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் மேட்டின் மீது ஏறி இறங்கிய போது பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது.இந்த விபத்தில் பஸ்சில் வந்த பரமேஸ்வரி, 46; ஞானாம்பாள், 55; பட்டு, 55; சுப்ரமணி, 50 உட்பட 8 பேர் காயமடைந்தனர். அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.பெரியதச்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை