உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

 விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 20க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், பி.டெக்., நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். இதில் பங்கேற்று தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறும் பணி நாடுநர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. தனியார் துறையில் பணிவாய்ப்பு பெற விரும்பும் பொது, மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்வி சான்றுகள், ஆதார், சுய விபர குறிப்புகளோடு முகாமில் பங்கேற்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்