உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கம்பன் விழாவில் பரிசளிப்பு

கம்பன் விழாவில் பரிசளிப்பு

விழுப்புரம்; கம்பன் விழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழுப்புரத்தில் நடந்த 42வது ஆண்டு விழாவில், கம்பன் கழகம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 'கம்பன் காட்டும் வாழ்வியல் நெறிகள்' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நடந்தது. இதில் பங்கேற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. கம்பன் கழக தலைவர் தனபால் வரவேற்றார். குலாம்மொய்தீன், முபாரக்அலி முன்னிலை வகித்தனர். முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தலைமை வகித்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., நற்சான்றிதழ் வழங்கி, பரிசளித்து பாராட்டினர். கம்பன் கழக துணை தலைவர் செந்தில் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை