உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் எதிரில் பள்ளம் தோண்ட எதிர்ப்பு: கமிஷனர் நேரில் ஆய்வு

வீட்டின் எதிரில் பள்ளம் தோண்ட எதிர்ப்பு: கமிஷனர் நேரில் ஆய்வு

திண்டிவனம்: திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மழைநீர் வடிவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை கமிஷனர் பார்வையிட்டார்.திண்டிவனம், சந்தைமேடு ப.உ.ச., நகரில் ஜெயராமன் என்பவரது வீட்டின் எதிரே அப்பகுதி கவுன்சிலர் சதீஷ் நடவடிக்கையின் பேரில், மழைநீர் வழிந்தோட நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப்பட்டது.இதற்கு ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்து ரோஷணை போலீசில் புகார் அளித்தார். இந்த பிரச்னை குறித்து சமூக வலைதளத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் செல்லும் வகையில் குழாய் பதித்து மண் கொட்டி மூடப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி