வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கள் இறக்க அனுமதித்தால் திராவிட தலைவர்களின் சாராய வியாபாரம் படுத்து விடும். ஒருபோதும் கள் இறக்க அனுமதிக்க மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது
18-Mar-2025
விழுப்புரம் : 'கள்' மீதான தடையை நீக்க கோரி, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தொழிலாளர்கள் 'கள்' குடித்து கொண்டே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.'கள்' மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், பனை ஏறும் தொழிலாளர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும். சென்னை தலைமை செயலகத்தில் மனு அளிக்க சென்ற தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியை போலீசார் அவமரியாதை செய்ததை கண்டித்தும்.சட்டசபையில் அமைச்சர் பொன்முடி, 'கள்' போதை பொருள் போல் சித்தரித்து பனை ஏறும் தொழிலாளர்கள் மீது அவதுாறு பரப்பிய செயலை கண்டித்தும், தமிழகம் முழுதும் நேற்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வையவன், ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, கள் என்பது உணவு, அது போதை பொருள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், ஆண், பெண் தொழிலாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கள்ளை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
கள் இறக்க அனுமதித்தால் திராவிட தலைவர்களின் சாராய வியாபாரம் படுத்து விடும். ஒருபோதும் கள் இறக்க அனுமதிக்க மாட்டார்கள்.
18-Mar-2025