உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்

விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்

மரக்காணம் : மரக்காணம் அருகே, பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், 27; கீர்த்தி, 27; கோகுல், 20; அனீஸ், 18; நால்வரும் கடந்த 31ம் தேதி நடுகுப்பத்திலிருந்து 2 பைக்குகளில் முருக்கேரியை நோக்கிச் சென்றனர்.அப்போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியுள்ளது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.இதுகுறித்து மரக்காணம் போலீசில், அளித்த புகாரில், காரில் வந்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 50; அய்யப்பன், 45; மற்றும் சுகுமார், 40; ஆகிய மூன்று பேரும் கொலை செய்யும் நோக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.அதன் பேரில், மாரிமுத்து, அய்யப்பன், சுகுமார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று காலை 10.00 மணிக்கு நடுக்குப்பம் மாரியம்மன் கோவில் அருகே மாரிமுத்து, சுகுமாரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. உடன், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை 11:00 மணியளவில் விரட்டியடித்தனர்.மேலும், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்.பி., விளக்கம்

மறியல் தொடர்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நடுக்குப்பம் கிராமத்தில் தலைமறைவு எதிரிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல் நடந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அந்த தகவலை மறியல் செய்த பொதுமக்களிடம் தெரிவித்தும் களையவில்லை. பல முறை போலீசார் கூறியும் களையாததால், போக்குவரத்து நெரிசலில் பணிக்கு செல்வோர், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்தை விரைவாக சீர்செய்யும் நோக்கில், போலீசார் சாலையில் அமர்ந்திருந்த ஆண்கள் சிலரை அப்புறப்படுத்தினர். இதில் போலீசார் தடியடி ஏதும் நடத்தவில்லை. சமூக வலைதளங்களில் போலீசார் தடியடி நடத்தியதாக தவறாக சித்தரித்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை