விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம், வழுதரெட்டி காலனி, விராட்டிக்குப்பம் பாதை, கம்பன் நகர், மகாராஜபுரம், பானாம்பட்டு பாதை, மாதா கோவில் பஸ் நிறுத்தம், வள்ளலார் அருள் மாளிகை, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவில் நகர செயலாளர் பசுபதி ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்கள் 2000 பேருக்கு வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். கவுன்சிலர்கள் கோல்டு சேகர், கோதண்டராமன், ஆவின் செல்வம், கலை முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், மாவட்ட பாசறை இணைச் செயலாளர்கள் வினித், ஜியாவுதீன், நகர அவைத்தலைவர் பால்ராஜ், பேரவைச் செயலாளர் கிருஷ்ணன், நகர வர்த்தக அணி செயலாளர் ரகுராமன்.எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் முத்துவேல், பாசறை செயலாளர் நீலமேகம், சிறுபான்மை பிரிவு செயலாளர் பெனோ என்கிற கஷ்மிர்ஜான், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திவாகர் செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, வார்டு செயலாளர்கள் வரதன், காத்தவராயன், மனோகர், விக்ரமன், பாஸ்கர், பார்த்திபன், ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.