உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சேதமான வடகுச்சிபாளையம் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சேதமான வடகுச்சிபாளையம் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம், வடகுச்சிபாளையம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது வடகுச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. இக்கிராமத்தில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள்,பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு 3 கி.மீ., மீட்டர் துாரம் நடந்து வந்து சிந்தாமணியில் பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.கிராமத்திற்கு செல்லும் பிரதான 3 கி.மீ., துாரமுள்ள சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் பொதுமக்கள், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பத்து ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வடகுச்சிபாளையம் கிராம சாலையை புதுப்பித்து தார் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை