மேலும் செய்திகள்
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
08-Oct-2025
விழுப்புரம்:பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பொது வினியோகத்திட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கும் விதத்தில், அனைத்து தாலுகா அலுவலகத்திலும், வரும், 11ம் தேதி வட்ட வழங்கல் அலுவலர்களால், குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை, நகல் அட்டை, மொபைல் எண் பதிவு மாற்றம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை அளிக்கலாம். பொது வினியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் உள்ளிட்டவை தொடர்பான, புகார்களை ரேஷன் அட்டைதாரர்கள் மனுவாக கொடுத்து, குறைகளை தீர்த்து கொள்ளலாம் என, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
08-Oct-2025