மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம் 424 மனுக்கள் குவிந்தன
29-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 444 மனுக்கள் பெறப்பட்டது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் 444 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
29-Oct-2024