| ADDED : நவ 27, 2025 04:58 AM
விழுப்புரம்: புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகம் முன் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர்கள் செல்வம், கமலகண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் வீரராகவன் வரவேற்றார். நிர்வாகிகள் சிவக்குமார், பலராமன், மாதவன் முன்னிலை வகித்தனர். கரிகாலன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். 29 விதமான தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக தொகுத்து தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை சீர்குலைக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் பணி செய்தால், அந்த தொழிலாளியை நிரந்தரம் செய்தல், ரயில்வேயில் காண்ட்ரக்ட் முறையை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் மோகன்(எ)மோசஸ் நன்றி கூறினார்.