உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கரும்பில் அதிக மகசூல் பெற ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை

 கரும்பில் அதிக மகசூல் பெற ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் கோ 86032 ரகம் பயிரிட்டு அதிக மகசூல் பெற ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு அபிவிருத்தி துறை அறிக்கை: மாவட்டத்தில் கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. அதே நேரத்தில் சாகுபடியில் ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாலும், தமிழக அரசு கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்கி வருவதாலும் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, கோ 86032 ரகம் பயிரிடும் போது அதிக மகசூல் பெற முடிகிறது. இந்த ரக கரும்பு அதிக துார்களுடன் பருமனாகவும் ஒரு ஜான் நீளம் கொண்ட கணு இடை வெளியுடன் கரும்பு உயரமாகவும் வளர்வதால் 6 மாதங்களில் விதைக்காக அறுவடை செய்தபோது ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிடைத்தது. அதன் மறுதாம்பு கரும்பு தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது ஏக்கருக்கு 70 டன் மகசூல் கிடைக்கும். இந்த வருடத்திற்கான கரும்பு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதோடு, மாநில அரசின் ஊக்கத்தொகை 349 ரூபாயையும் சேர்த்தால் கரும்பு டன் ஒன்றுக்கு 3639.50 ரூபாய் வரை கிடைக்கிறது. மற்ற பயிர்களின் விலையைக் காட்டிலும் தற்போதைய கரும்பின் விலை மிகவும் லாபகரமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்