உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ராமதாஸ் சேரும் கூட்டணி வெற்றி பெறும் பா.ம.க., கவுரவ தலைவர் மணி தகவல் 

 ராமதாஸ் சேரும் கூட்டணி வெற்றி பெறும் பா.ம.க., கவுரவ தலைவர் மணி தகவல் 

திண்டிவனம்: 'ராமதாஸ் சேருகின்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்' என பா.ம.க,, கவுரவ தலைவர் மணி தெரிவித்துள்ளர். நேற்று மாலை தைலாபுரத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சேலத்தில் வரும் 29ம் தேதி பா.ம.க., மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தில் ராமதாஸ், தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்பதால் தேசிய அளவில் பார்க்கப்படுகிறது. சக்தி வாய்ந்த தலைவராக உள்ள ராமதாசை, சிலர் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தரப்பினர் போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடிதத்தை பெற்றனர். இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 4ம் தேதி வழங்கிய தீர்ப்பில் யார் தலைவர் என்பது குறித்து, உரிமையியல் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள், அன்புமணி தலைவர் இல்லை என தெரிவித்து விட்டனர். அன்புமணி பா.ம.க., விலிருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் கட்சியின் தலைவர் இல்லை. அன்புமணியுடன் இருப்பவர்கள், ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என கூறுவதெல்லாம் தேர்தல் நெருங்கி வருவதுதான் காரணம். அன்புமணி தரப்பினர் விருப்ப மனு பெறுவது போலியான நாடகத்தை நடத்தி கூட்டணி பேச முயற்சி செய்யும் செயல். வரும் சட்டசபை தேர்தலில் ராமதாஸ் சேருகின்ற கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். இவ்வாறு மணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ