உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரங்கபூபதி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா

ரங்கபூபதி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா

செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சாந்தி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சரண்யா முன்னிலை வகித்தனர். கிளியனுார் ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரி செயலாளர் டாக்டர் ஷர்மிஸ்ரீ வாழ்த்தி பேசினார்.மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராபியா ஆண்டறிக்கை வாசிதார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்புரையாற்றினார். சிறந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தன்னம்பிக்கை பேச்சாளர் மூகாம்பிகை ரத்தினம் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை