இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் : எம்.பி., வலியுறுத்தல்
வானுார்: ஆலத்துாரியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள், 73; என்பவர், நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். இயற்கைப் பேரிடரில் உயிரிழந்த பச்சையம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர், தனது முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என கேட்டுக்காள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.