உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் அனைத்து கட்சிகளின் பேனர்கள் அகற்றம்: போலீசார் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு

திண்டிவனத்தில் அனைத்து கட்சிகளின் பேனர்கள் அகற்றம்: போலீசார் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு

திண்டிவனம்: திண்டிவனத்தில் அனைத்து அரசியல் கட்களின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர். போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில், காந்தி சிலை, தீர்தக்குளம், செஞ்சி ரோடு, பஸ் நிலைய மேம்பாலத்தின் கீழ்பகுதி, பழை பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் அனுமதியன்றி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்கள் தங்களின் குடும்ப விழாக்களான பிறந்த நாள், திருமணம், மஞ்சள் நீர், கண்ணீர் அஞ்சலி என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைப்பது கலாசாரமாக மாறி விட்டது.பொதுவாக பேனர் வைக்க வேண்டுமென்றால், நகராட்சிக்கு பணம் கட்ட வேண்டும், போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை யாரும் கடைபிடிப்பதில்லை. சகட்டு மேனிக்கு பேனர் வைத்து வந்தனர்.குறிப்பாக, நேரு வீதி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு எதிரே பேனர் வைத்து வருவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் வைத்த பேனர்களை விழா முடிந்து பல நாட்களாகியும் எடுக்காமல் இருப்பது பற்றி போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டும் போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்தனர். பேனர் எடுக்காமல் இருப்பது குறித்து, திண்டிவனம் டி.எஸ்.பி.,க்கு பொது மக்கள் சார்பில் புகார்கள் வந்தது. டி.எஸ்.பி., பிரகாஷ் உத்தரவின் பேரில், திண்டிவனம் பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கபப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் பொது நிகழ்ச்சி பேனர்கள் அனைத்தும் நேற்று போலீசார் மேற்பார்வையில் அதிரடியாக அகற்றப்பட்டது. நீண்ட நாட்களுக்குப்பின் பேனர்கள் அகற்றப்பட்டது பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. வருங்காலத்தில் அனுமதியில்லாமல் பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் பாரபட்சமின்றிநடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேனர் வைப்பது தடுக்க முடியும். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை