உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பயிர் இழப்பீட்டை விரைந்து வழங்க கிராம அளவில் குழுக்கள் நியமிக்க கோரிக்கை

பயிர் இழப்பீட்டை விரைந்து வழங்க கிராம அளவில் குழுக்கள் நியமிக்க கோரிக்கை

திண்டிவனம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை அனைத்து துறைகளை இணைத்து கிராம அளவில் குழுக்களை அமைத்து இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், மயிலம், திண்டிவனம், வானுார், விழுப்பும், முகையூர் பகுதிகளில் பெஞ்சல் புயலால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய், வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்கள் தனித்தனியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.மேலும் இழப்பீடு குறித்து கண்டறிய பிற மாவட்டங்களில் இருந்தும் அலுவலர்களை வரவழைத்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.ஆனால், துறை அலுவலர்கள் தனித்தனியாக கணக்கெடுப்பு செய்வதால் கால விரயம் ஏற்படுவதுடன் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கிராம வாரியாக குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு செய்து பொங்கல் பண்டிகைக்குள் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை