உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  688 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 688 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனு: காந்தியின் கனவை நிறைவேற்றவும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பங்கேற்பு ஜனநாயாகமாக மாற்றவும், கடந்த 1992ல் அரசியல் சாசன திருத்தம் மேற்கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அரசியல் சாசன அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அந்த 73, 74வது அரசியல் சாசன திருத்தத்தை, தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994ம் ஆண்டு இயற்றப்பட்டது. கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு தரும் பல திட்டங்கள் பெரும்பாலும் கிராமங்களை சென்றடைவதே இல்லை. கிராம மக்கள், தங்களுக்கு தேவையான பணிகளை தாங்களே தேர்வு செய்து, தங்களது வரிப்பணத்தால் அரசு மூலம் நிறைவேற்று அதிகாரத்தை கிராம சபை தருகிறது. அத்தகைய அதிகாரம் செய்யும் கிராம சபைகளை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளிலும் முறையாக நடத்தாமல் பெயரளவில் நடத்தப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டம் 243ஏ பிரிவு மற்றும் பஞ்சாயித்துராஜ் சட்டம் வலியுறுத்தும் விதிமுறைகளின்படி, கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும். கிராம சபையின் மாவட்ட ஆய்வாளர் என்ற முறையில், அதற்கான உத்தரவுகளை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். அதன் மூலம் கிராம சபைக் கூட்டங்கள், கிராம சபை விதிப்படி 100 சதவீதம் முறைப்படி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் குறித்தும், நடைபெறும் இடம், நேரம் ஆகிய தகவல்களை கிராம மக்களுக்கு, ஒரு வாரத்திற்கு முன் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை