உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.80 லட்சம் மதிப்பில் பூங்கா பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ரூ.80 லட்சம் மதிப்பில் பூங்கா பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

செஞ்சி : செஞ்சி பி. ஏரியை ரூ.80 லட்சம் மதிப்பில் அழகுபடுத்தி பூங்கா அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.செஞ்சி, பேரூராட்சி கூட்டம் தலைவர் மொக்தியார் அலி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கலையரசி முன்னிலை வகித்தார்.கவுன்சிலர்கள் சங்கர், சீனிவாசன், ஜான் பாஷா, சிவக்குமார், கார்த்தி, அகல்யா வேலு, இளநிலை உதவியாளர் பாலாரங்கன் ஆய்வாளர் ராஜா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் செஞ்சி பி. ஏரியில் ரூபாய் 80 லட்சம் மதிப்பில் நினைவு வளைவு, பேவர் பிளாக் சாலை, மிதக்கும் நீரூற்று, அலங்கார மின்விளக்குகள் குழந்தைகள் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பணிகள் செய்வது என்றும், 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் வழங்க சாலைகளின் குறுக்கே எடுக்கப்பட்ட பள்ளங்களை சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாயுடன் சிமெண்ட் சாலை அமைக்கவும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை