உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வாயில் கருப்புதுணி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அரசு போக்குவரத்துகழக தலைமை அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் வாயில் கருப்புத்துணி கட்டி கொண்டு ஆர்பாட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.மாநில பொதுச்செயலாளர் கர்சன் கண்டன உரையாற்றினர். 109 மாத நிலுவையோடு டி.ஏ., உயர்வளிக்க வேண்டும். 21 மாத கால பணப்பலன்கள் வழங்குதல், ஓய்வுபெறும் நாளில் பணப்பலன்கள் வழங்கல், பழைய பென்ஷன் திட்டம், வாரிசு வேலை, மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ