உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வருவாய் துறை சங்க கூட்டமைப்பு மாநாடு

வருவாய் துறை சங்க கூட்டமைப்பு மாநாடு

விழுப்புரம் : விழுப்புரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கண்ணன் வரவேற்றார். செயலாளர் முருகன் கோரிக்கை விளக்கி பேசினார். பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் பேசினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க புஷ்பகாந்தன், கிராம ஊழியர் சங்க ஆதி லட்சுமணன், நில அளவையர் சங்க மகேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், சி.ஐ.டி.யூ., செயலாளர் மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில், வருவாய்த்துறை, நிலஅளவை துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும், துறையில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் விமல்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை