உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெற்பயிர் கணக்கெடுப்பு பணி: வேளாண் அதிகாரி ஆய்வு

நெற்பயிர் கணக்கெடுப்பு பணி: வேளாண் அதிகாரி ஆய்வு

வானுார் : கிளியனுார் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்கள் கணக்கெடுப்பு பணிகளை விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி நள்ளிரவு முதல் 8ம் தேதி வரை பலத்த மழை பெய்தது. குறிப்பாக மரக்காணம், வானுார் தாலுகாக்களில் கனமழை கொட்டிதீர்த்தது.இதன் காரணமாக வானுார், கிளியனுார் மற்றும் வட்டார பகுதியில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.அதனைத் தொடர்ந்து, கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், அந்தந்த கிராமங்களில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் குழுவினர் கிராமம் வாரியாக பாதிக்கப்பட்ட பரப்பு மற்றும் விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.இப்பணிகளை விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் ஆய்வு செய்தார்.வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர் ரேவதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ