மேலும் செய்திகள்
கிராம உதவியாளர்களை மாற்று பணிக்கு பயன்படுத்த தடை
31-Jul-2025
திண்டிவனம், ஆக. 30-திண்டிவனம் அருகே முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை, நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பார்வையிட்டார். விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வானுார் உட்கோட்டத்தில், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெள்ளிமேடுபேட்டை-புதுச்சேரி சாலையை இருவழி சாலையிலிருந்து நான்கு வழியாக சாலையாக மாற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று காலை ஆய்வு செய்தார். அவர் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், வட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் உத்தண்டி, தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், கோட்ட பொறியாளர் சாலை பாதுகாப்பு அலகு ஹேமலதா, உதவி கோட்ட பொறியாளர்கள் கவிதா, மகேஷ், கண்ணன் உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராமன்,குரு, தீனதயாளன், கோகுல கிருஷ்ணன்,தர்மராஜ் உடனிருந்தனர்.
31-Jul-2025