உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டிவனம் : ரோஷனண காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் திண்டிவனத்தைக் கடந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக மதுஅருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எஸ்.பி., சரவணன், அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார். அதன் பேரில் ரோஷணை காவல் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். சந்தைமேடு பகுதியில் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !