உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வானுார்: விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், மொரட்டாண்டி டோல்கேட் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதனையொட்டி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், சுங்கச்சாவடி திட்ட இயக்குனர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கி, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.உதவி கோட்டப் பொறியாளர்கள் தன்ராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், ராஜ சுவேதா வரவேற்றனர்.நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும். போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும், என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.சாலைப் பணியாளர்கள், அலுவலர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி