உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் தாலுகா அனைத்து தனியார் மின்பணியாளர் நலச் சங்கம் சார்பில் மே தின விழா மற்றும் மின்சார பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்திற்கு, சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், சீனுவாசன், சார்லஸ், சிவக்குமார், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ், மின்துறை மண்டல செயற் பொறியாளர் சிவசங்கரன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன், தரம் குரூப்ஸ் செயலாளர் பப்ளசா ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம், முக்கிய சாலைகள் வழியாக செஞ்சி பஸ் நிறுத்தத்தில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !