மேலும் செய்திகள்
மாணவர் மாயம்
28-Oct-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வங்கியில் இருந்த நகையை மீட்பதற்காக வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந் தவர் ஜெயச்சந்திரன், 32; இவர் நேற்று காலை 11:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுாரில் ஒரு வங்கியில் அடகு வைத்த நகை மீட்க 1 லட்சம் ரூபாய் கொண்டு சென்றார். வங்கியில் அப்ரைசர் இல்லாததால் பணத்தை பைக் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். வழியில் கள்ளுக்கடை சந்திப்பு பகுதியில் டீக்கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்து விட்டு வந்த பார்த்தபோது பணம் இல்லாதது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
28-Oct-2025