உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவிலில் பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

கோவிலில் பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

வானுார்: வானுார் அருகே கோவில் கூட்ட நெரிசலில் பக்தரிடம் 15 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, காசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத் மனைவி நளினி, 42; இவர் கடந்த 6ம் தேதி ராம நவமியை முன்னிட்டு வானுார் அடுத்த பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, 15 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து நளினி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி