உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாரதிதாசன் மணி மண்டபம் கட்ட ரூ.3.5 கோடி... ஒதுக்கீடு:பொம்மையார்பாளையத்தில் இடம் தேர்வு

பாரதிதாசன் மணி மண்டபம் கட்ட ரூ.3.5 கோடி... ஒதுக்கீடு:பொம்மையார்பாளையத்தில் இடம் தேர்வு

விழுப்புரம்: கோட்டக்குப்பத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு மணி மண்டபம் கட்ட 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாரதிதாசன் எழுதிய எழுச்சி மிக்க எழுத்துக்களால், 'புரட்சிக் கவிஞர்' என்றும் 'பாவேந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். அவர் 'பிசிராந்தையார்' என்ற நாடக நுாலுக்கு, 1969ம் ஆண்டு சாகித்திய அகாடமியின் விருது பெற்றவர். அவரது இலக்கியப் பணிகளைப் போற்றி பெருமைப்படுத்தும் விதமாக, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில், அரசு சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படுகிறது. முன்னதாக, பாரதிதாசனுக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, சட்டசபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததின்பேரில், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் பாரதிதாசனுக்கு அரங்கம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, வானுார் தாலுகா, பொம்மையார்பாளையம் கிராமத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைப்பதற்காக, அரசு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கோட்டக்குப்பத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம், 3.50 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து, கலெக்டரின் ஒப்புதலுடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ