ஊரக வளர்ச்சி சங்க ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மண்டல பொறுப்பாளர் பொன்னன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலாஜி, அன்பு, அமலா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவற்றார். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து கணினி உதவியாளர்கள், துாய்மை காவலர்களுக்கு மேம்படுத்தபட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.