உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கேசவலு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். நிர்வாகிகள் சரவணன், காஞ்சனா, சிவபிரகாசம், சிலம்புசெல்வன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் நியமன நடைமுறையை கைவிட வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல், தணிக்கை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை